திமுக அரசு மேற்கொண்ட முறையான தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்துக் கொண்டே வருகிறது.
அவ்வகையில் புதிதாக 1,66,628 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 6,596 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 17 மாவட்டங்களில் 100க்கும் கீழாக பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்ச பாதிப்பாக கோவையில் 796, ஈரோட்டில் 686, சேலம் 472, திருப்பூரில் 419, சென்னையில் 396, தஞ்சையில் 338, செங்கல்பட்டில் 277, திருச்சியில் 247 என பதிவாகியுள்ளது.
அதேபோல வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 ஆயிரத்து 432 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 884 ஆக குறைந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 166 தொற்று பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்த பலி எண்ணிக்கை 31 ஆயிரத்து 746 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் தொடர்ந்து முகக் கவசம் அணிவதையும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.