Corona Virus

“கொரோனா பரவல் குறைந்தாலும் மாஸ்க் அணிவதை தொடர வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்!

கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கை நல்ல நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் மருத்துவர்கள் குழுவுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் , ஊதிய முரண்பாடுகளை களையவும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியம், மற்றவர்களுக்கு பணியிட மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

அரசு மருத்துவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், ஊதிய உயர்வு, சலுகைகள் குறித்து அரசு மருத்துவர்கள் அமைப்பு சங்கங்கள் சார்பாகவும், மருத்துவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.

மருத்துவ சங்கங்கள் தங்களுடைய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முதலமைச்சரிடம் இவர்களின் கோரிக்கையை எடுத்துரைத்து கூடிய விரைவில் உறுதியான தீர்வு கொண்டு வரப்படும்.

தனது உயிரை துச்சமென மதித்து இன்றைக்கு களத்தில் பணியாற்றி வருகிறார்கள். 2,400க்கும் மேலான மருத்துவர்களுக்கு அவர்களுக்கு விரும்பிய இடத்தில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்றுவோம்.

“கொரோனா பரவல் குறைந்தாலும் மாஸ்க் அணிவதை தொடர வேண்டும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்!

கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த எண்ணிக்கை நல்ல நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

2,510 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிகிச்சைக்கு தேவையான இரண்டு வகை மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. ஆரம்ப அறிகுறிகளுடன் வந்தால் உடனடியாக சிகிச்சை பெற்று நலம் பெறலாம் என்று தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்று குறைந்து வந்தாலும் மக்களை கேட்டுக் கொள்வது தொடர்ந்து முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை பின்பற்றினால் மேலும் கொரோனா நோய் தாக்கத்திலிருந்து விரைவில் விடுபடலாம் எனக் கூறினார்.

11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடக்கம் குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, மாணவர் விடுதி, உணவு விடுதி போன்ற அம்சங்கள் கட்டுமான பணிகள் முடிவுற்ற பிறகு, மற்ற பணிகள் துவங்கும் என்றார்.

banner

Related Stories

Related Stories