Corona Virus

இந்தியாவில் 22 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா; 3வது அலையை பரவ விடாமல் தடுக்குமா ஒன்றிய பா.ஜ.க அரசு?

கேரளாவில் குழந்தை உட்பட மூவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் 22 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா; 3வது அலையை பரவ விடாமல் தடுக்குமா ஒன்றிய பா.ஜ.க அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலைக்கு B.1.617.2 என்ற டெல்டா வகைதான் காரணம் என தெரிவிக்கப்பட்டது. சுமார் 90 நாட்களாக இந்தியாவை பீடித்திருந்த இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழாக பதிவாகியுள்ளது.

பல நாட்களுக்கு பிறகு மக்கள் சற்று மூச்சு விட தொடங்கியுள்ள நிலையில் B.1.617.2 என்ற டெல்டா வைரஸ் தற்போது B.1.617.2.1 என்ற டெல்டா ப்ளஸ் வைரஸாக கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த டெல்டா ப்ளஸ் வைரஸுக்கு இதுவரையில் இந்தியாவில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி மகராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் போன்ற பகுதிகளில் 16 பேருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 22 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா; 3வது அலையை பரவ விடாமல் தடுக்குமா ஒன்றிய பா.ஜ.க அரசு?

கேரளாவின் பத்தனம் திட்டா மற்றும் பாலக்காடு பகுதிகளில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்களுக்கும், மத்திய பிரதேசத்தில் 65 வயது பெண்மணிக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது போக கர்நாடகாவிலும் 2 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இந்த வகை கொரோனா வைரஸ் பிரிட்டன், அமெரிக்கா, சீனா, போர்ச்சுகல், ஜப்பான், போலந்து, நேபாளம், ரஷ்யா, சுவிட்சர்லாந்து என 9 நாடுகளிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் மூலம் நாட்டில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஆருடம் தெரிவிக்கின்றனர்.

ஆகவே ஒன்றிய அரசு இரண்டாவது அலையின் போது கடைபிடித்த மெத்தனத்தை விடுத்து போர்க்கால அடிப்படையில் மூன்றாவது அலையை பரவ விடாமல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அனைவரது வேண்டுகோளாக உள்ளது.

banner

Related Stories

Related Stories