தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு அமைந்த நாள் முதலே கொரோனா பரவலை தடுப்பதையே முழு வேலையாக கொண்டு செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன்படி அறிவிக்கப்பட்டு முழு ஊரடங்கு, பிறகு ஊரடங்கு, தளர்வுகள், கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவிப்புகளின் பலனாக தற்போது மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 61 ஆயிரமாக குறைந்துள்ளது.
அந்த வகையில் புதிதாக 1,65,829 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 7,427 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் கோவையில் 891, ஈரோட்டில் 785, சேலத்தில் 511, திருப்பூரில் 458, சென்னையில் 439, தஞ்சையில் 388, நாமக்கல்லில் 314, செங்கல்பட்டில் 310 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 15 ஆயிரத்து 251 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 189 பேர் பலியாகியிருக்கிறார்கள். இருப்பினும் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 329 ஆக உள்ளது.