Corona Virus

தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா தொற்று.. ஒரேநாளில் 17,043 பேர் டிஸ்சார்ஜ் - 7,817 பேர் பாதிப்பு!

தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் விளைவாக கடந்த 1 மாதமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா தொற்று.. ஒரேநாளில்  17,043 பேர் டிஸ்சார்ஜ் - 7,817 பேர் பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளால் தமிழ்நாட்டில் கடந்த 33 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருந்துவந்த கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,72,543 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 7,817 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,22,497 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 17,043 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,21,928 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 182 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 76 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 106 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31,197 ஆக உள்ளது.

banner

Related Stories

Related Stories