முழு ஊரடங்கின் பலனை அடுத்து தமிழ்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக குறைந்து வருகிறது.
அவ்வகையில் புதிதாக 1,63,225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 11,805 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் கோவையில் 1563, ஈரோட்டில் 1270, சென்னையில் 793, சேலத்தில் 759, தஞ்சையில் 541 என அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 267 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் புதிதாக 23 ஆயிரத்து 207 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை அடுத்து இதுவரையில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 23 ஆயிரத்து 15 ஆக உள்ளது.
ஆகவே தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 215 பேர் வீட்டு தனிமையிலும் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.