கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தமிழ்நாட்டில் 30 ஆயிரத்துக்கும் மேலாக பதிவாகி வந்த தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முடுக்கிவிடப்பட்ட தடுப்பு நடவடிக்கையால் சரி பாதியாக குறைந்திருக்கிறது.
அந்த வகையில் புதிதாக 1,72,838 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 15,757 பேருக்கு தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதில் கோவையில் 2056, ஈரோட்டில் 1365, சென்னையில் 1094, சேலத்தில் 916, திருப்பூரில் 853, தஞ்சையில் 656, செங்கல்பட்டில் 621 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கையை போன்று உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்த வண்ணம் உள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 378 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் ஒரே நாளில் 29 ஆயிரத்து 243 பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஆகவே தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1,74,802 ஆக குறைந்துள்ளது.