தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அமைந்ததில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கிவிட்டதன் பலனாக படிப்படியாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. அவ்வகையில் 1,71,237 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 16,813 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் கோவையில் 2236, ஈரோட்டில் 1390, சென்னையில் 1223, சேலத்தில் 945, திருப்பூரில் 897, செங்கல்பட்டில் 676, தஞ்சையில் 652, நாகையில் 504 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
அதே சமயத்தில் கொரோனாவில் இருந்து புதிதாக 32,049 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இதுநாள் வரை 400க்கும் அதிகமாக பதிவாகி வந்த பலி எண்ணிக்கை தற்போது 400க்கு கீழ் குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 358 உயிரிழந்திருக்கிறார்கள். அதனையடுத்து 28, 528 பேர் ஒட்டுமொத்தமாக பலியாகி இருக்கிறார்கள்.
மேலும் கொரோனா தொற்றுக்காக வீட்டு தனிமை உட்பட மாநிலம் முழுவதும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 2 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அவ்வகையில் தற்போது 1,88,664 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.