Corona Virus

தொடர்ந்து குறையும் பாதிப்பு; ஒரே நாளில் மேலும் 31,253 பேர் டிஸ்சார்ஜ் - தமிழ்நாட்டின் கொரோனா நிலவரம்!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2,04,258 ஆக உள்ளது.

தொடர்ந்து குறையும் பாதிப்பு; ஒரே நாளில் மேலும் 31,253 பேர் டிஸ்சார்ஜ் - தமிழ்நாட்டின் கொரோனா நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் படிப்படியாக கொரோனா பரவலின் வேகம் குறைந்துள்ளது.

அதன்படி புதிதாக 1.70 லட்சத்து 332 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 17 ஆயிரத்து 321 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கோவையில் 2319, ஈரோட்டில் 1405, சென்னையில் 1345, சேலத்தில் 957, திருப்பூரில் 913, செங்கல்பட்டில் 726, தஞ்சையில் 685, திருச்சியில் 510 என பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது. அதில் புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 405 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இருப்பினும் ஒரே நாளில் 31 ஆயிரத்து 253 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரையில் 20 லட்சத்து 59 ஆயிரத்து 597 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதன்படி தற்போது தமிழ்நாட்டில் வீட்டு தனிமை உட்பட கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்து 4258 பேர் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories