Corona Virus

அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை; குறையும் கொரோனா பாதிப்பு - தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை; குறையும் கொரோனா பாதிப்பு - தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் போர்க்கால நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

அவ்வகையில், புதிதாக 24 ஆயிரத்து 405 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது பதிவாகியுள்ளது. அதில், கோவையில் 2980, சென்னையில் 2062, ஈரோட்டில் 1671, திருப்பூரில் 1264, சேலத்தில் 1253, தஞ்சையில் 1020 என அதிகபட்ச பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 460 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 25 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் மேலும் 32 ஆயிரத்து 221 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்து 426 ஆக குறைந்துள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories