சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய பின் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதன் விவரம்:
கொரோனாவினால் யாரும் தமிழகத்தில் தவித்து விடக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் 5700 குடும்பங்களுக்கு இதுவரை நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம். கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து இதனை வழங்குவோம்.
குஜராத்திற்கு வழங்கும் அளவிற்கு தடுப்பூசிகள் வழங்கவில்லை. இது ஒழுங்ககாக தடுப்பூசிகள் வழங்கும் முறையில்லை என தெளிவாக தெரிகிறது. மருத்துவக்குழு பரிந்துரைப்பதைதான் தமிழக அரசு செய்யும். மக்களுக்கு அச்சம் உள்ளது. ஆனால் முதல்வர் கூறியதை போல் கொரோனா போரில் வெல்ல தடுப்பூசி தான் ஆயுதம். அனைவரும் போட்டுக்கொள்ளவேண்டும்.
முதல்வரே தமிழக மக்களிடம் வெளியே வரவேண்டாம் என கெஞ்சி கேட்கிறார். கிராமங்களில் கொரோனா ஒன்றும் செய்யாது என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இதனை புரிந்துக்கொள்ளவேண்டும். அனைத்து கட்சியையும் அழைத்து ஒன்றாக கருத்துகளை கேட்டார்கள். கொரோனா போரில் முழுமையான வெற்றி பெற வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.