Corona Virus

தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று; ஒரே நாளில் மேலும் 31,673 பேர் டிஸ்சார்ஜ் - தமிழகத்தின் கொரோனா நிலவரம்!

கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.

தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று; ஒரே நாளில் மேலும் 31,673 பேர் டிஸ்சார்ஜ் - தமிழகத்தின் கொரோனா நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக அரசின் சீரிய முயற்சி காரணமாக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

அவ்வகையில் புதிதாக 1.56 லட்சத்து 839 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 26 ஆயிரத்து 509 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் கோவையில் 3332, சென்னையில் 2467, ஈரோட்டில் 1653, திருப்பூரில் 1338, சேலத்தில் 1140, செங்கல்பட்டில் 1106 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 490 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 31 ஆயிரத்து 673 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனது மக்களிடையே சற்று மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 2.96 லட்சத்து 131 ஆக குறைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories