தமிழகத்தில் தொடர்ந்து எட்டாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அவ்வகையில் புதிதாக 1.63 லட்சத்து 763 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 30 ஆயிரத்து 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அதில் அதிகபட்சமாக கோவையில் 3692, சென்னையில் 2705, ஈரோட்டில் 1743, திருப்பூரில் 1697, சேலத்தில் 1492, செங்கல்பட்டில் 1314, திருச்சியில் 1099, திருவள்ளூரில் 1072 என அதிக அளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து மொத்த பாதிப்பு 20,39,716 அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 486 பேர் பலியானதை அடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 23,261 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 31 ஆயிரத்து 759 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இதனையடுத்து தற்போது மூன்று லட்சத்து 10 ஆயிரத்து 157 பேருக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும், கொரோனா மையங்களிலும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.