Corona Virus

முழு ஊரடங்கு எதிரொலி: சென்னையில் 3000க்கும் கீழ் பதிவான கோவிட் பாதிப்பு; ஒரே நாளில் 30063 பேர் டிஸ்சார்ஜ்

வெகு நாட்களுக்கு பிறகு சென்னையில் மூவாயிரத்துக்கும் கீழ் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 

முழு ஊரடங்கு எதிரொலி: சென்னையில் 3000க்கும் கீழ் பதிவான கோவிட் பாதிப்பு; ஒரே நாளில் 30063 பேர் டிஸ்சார்ஜ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கின் விளைவாக அண்மை நாட்களாக பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

அதன்படி புதிதாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 124 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 33 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 4,734 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தில் அதிகமான பாதிப்புகள் இருந்த சென்னையில் வெகு நாட்களுக்கு பிறகு மூவாயிரத்துக்கும் கீழ் தொற்றாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

முழு ஊரடங்கு எதிரொலி: சென்னையில் 3000க்கும் கீழ் பதிவான கோவிட் பாதிப்பு; ஒரே நாளில் 30063 பேர் டிஸ்சார்ஜ்

அதன்படி, புதிதாக 2,779 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தபடியாக திருப்பூரில் 2074, ஈரோட்டில் 1699, திருச்சியில் 1617, மதுரையில் 1395, செங்கல்பட்டில் 1392, திருவள்ளூரில் 1221, விருதுநகரில் 1016 என அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 275 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 199 பேரும் என 474 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறர்கள். இதையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்தபடியாக, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கு நிகராக குணமடைவோரின் எண்ணிக்கையும் பதிவாகி வருகிறது. அதன்படி புதிதாக 30 ஆயிரத்து 63 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories