Corona Virus

தமிழகத்தில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை; ஒரே நாளில் 422 பேர் பலி - Corona Updates

கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் தமிழகத்தில் மேலும் 422 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை; ஒரே நாளில் 422 பேர் பலி - Corona Updates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் கோர முகத்தால் நாட்டு மக்கள் நாள்தோறும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

அவ்வகையில் தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 425 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 35 ஆயிரத்து 476 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

சென்னையில் புதிதாக 5169 பேருக்கும், கோவையில் 3944 பேருக்கும், செங்கல்பட்டில் 1982, திருப்பூரில் 1446, திருச்சியில் 1407, ஈரோட்டில் 1352, திருவள்ளூரில் 1259, தஞ்சையில் 1176, குமரியில் 1160, மதுரையில் 1139, நாமக்கலில் 1032, திருவண்ணாமலையில் 1006 என அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது.

அதன் காரணமாக கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்து 94 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 422 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக 25 ஆயிரத்து 196 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories