Corona Virus

“கொரோனாவை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது  சென்னை மாநகராட்சி” - மத்திய சுகாதாரத்துறை பாராட்டு!

வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை, கொரோனா தடுப்பூசி முகாம்கள் என கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்படும் சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

“கொரோனாவை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது  சென்னை மாநகராட்சி” - மத்திய சுகாதாரத்துறை பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நாள்தோறும் மக்கள் உயிரிழந்த வண்ணம் உள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையே நீடிக்கிறது. இருப்பினும் சில முக்கிய நகரங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகள் உடனடியாக சிகிச்சை கிடைக்கும் வகையில் வகை செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில் சென்னையில் இது போன்ற துரித தடுப்பு நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதில் zero delay ஆம்புலன்ஸ், வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று அறிகுறி சோதனை, காய்ச்சல் முகாம் என அனைத்து தடுப்பு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெகுவாக பாராட்டியுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்புக்கு சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடைமுறைகள் சிறப்பானதாக உள்ளது. அதனை நாடுமுழுதும் மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் உள்ளிடோர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, சென்னை மாநகராட்சியானது வீடுவீடாக சென்று சோதனை நடத்துவது, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடுவதில் முன்னுரிமை அளிப்பது, கார் ஆம்புலன்ஸ் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது மிகவும் சிறப்பானவை என்று கூறி பாராட்டு தெரிவித்தார். இதனை நாடு முழுதும் மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories