Corona Virus

கோவிட் நோயாளிகளை ஆம்புலன்ஸில் காக்க வைப்பதை தவிர்க்க கூடுதல் படுக்கைகள் அமைப்பு- அமைச்சர் திறந்து வைப்பு!

18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்காக 11 லட்சம் தடுப்பூசி வந்திருப்பதாகவும், இது அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவிட் நோயாளிகளை ஆம்புலன்ஸில் காக்க வைப்பதை தவிர்க்க கூடுதல் படுக்கைகள் அமைப்பு- அமைச்சர் திறந்து வைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 136 ஆக்சிஜன் படுக்கைகளை மருத்துவம் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேட்டியளித்த அவர், “ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2050 படுக்கைகள் உள்ளதாகவும், இங்கு கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சில் காக்க வைக்காமல் உடனடி சிகிச்சை அளிக்க 136 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை பார்க்க அவர்களது உறவினர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களை கவனித்துக்கொள்ள கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கோவிட் நோயாளிகளை ஆம்புலன்ஸில் காக்க வைப்பதை தவிர்க்க கூடுதல் படுக்கைகள் அமைப்பு- அமைச்சர் திறந்து வைப்பு!

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்காக 11 லட்சம் தடுப்பூசி வந்திருப்பதாகவும், இது அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டீராய்ட் பயன்பாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைவதால் கருப்பு பூஞ்சை ஏற்படுவதாகவும், தமிழகத்தில் தற்போது வரை 9 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories