தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் கடந்த 7 நாட்களாக டேங்கர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.
இதனடிப்படையில் மேற்கு வங்கத்தில் இருந்து கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு முதல் கட்டமாக 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விரைவு ரயிலில் திருவொற்றியூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான காண்கார் கண்டெய்னர் யார்டு நிறுவனத்திற்கு வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலா என்ற இடத்தில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு விரைவு ரயில் சென்னை திருவொற்றியூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கான்கார்ட் யார்டுக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது
இதனையடுத்து கிரேன் மூலம் ஆக்சிஜன் டேங்கர் இறக்கப்பட்டு லாரிகளில் வைக்கப்பட்டு ஒரு டேங்கர்லாரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒடிசாவில் இருந்து வரும் ஆக்சிஜன் ரயிலை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக வட்டார போக்குவரத்து துறை காவல் தறை தீயணைப்புத் துறை மின்சாரத் துறை போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்சிஜன் இறக்கப்பட்டன.
கடந்த 13 ஆம் தேதியில் இருந்து இன்று வரை 420 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது குறைந்துள்ளதாக தெரிகிறது.