Corona Virus

சென்னை வந்தது 1.72 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள்: நாளை முதல் 18+ வயதினருக்கு தடுப்பூசி திட்டம் தொடக்கம்

18 வயதுக்கு மேலானோருக்கு நாளை முதல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னைக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தது.

சென்னை வந்தது 1.72 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள்: நாளை முதல் 18+ வயதினருக்கு தடுப்பூசி திட்டம் தொடக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து ஏா்இந்தியா விமானத்தில் சென்னை வந்து சோ்ந்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் மத்திய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை.

இதையடுத்து தமிழக அரசு தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தினமும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது.

இந்நிலையில் நாளை (மே 20) முதல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் திட்டம் தொடங்கவுள்ளது. அதன் காரணமாக இன்று காலை ஹைதராபாத்திலிருந்து 72 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மும்பையிலிருந்து ஒரு லட்சம் கோவிசீல்டு தடுப்பூசிகள் ஏா் இந்தியா விமானத்தில் சென்னை வந்துள்ளது. அந்த மருந்துகளை சென்னை விமான நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையினா் பெற்றுக்கொண்டு, சென்னை டிஎம்எஸ்சில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனா்.

இதையடுத்து மேலும் தடுப்பூசி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் விமானங்களில் சென்னை வரவிருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதன்படி, இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லியிலிருந்து வெண்டிலேட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் 888 கிலோ 35 பாா்சல்களில் சென்னை விமானநிலையம் வந்தது.

டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் வெண்டிலேட்டா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 888 கிலோ எடையுடைய மருத்துவ பொருட்கள் அடங்கிய பாா்சல்கள் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது.

banner

Related Stories

Related Stories