Corona Virus

ஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 2.50 லட்சத்தை நெருங்குகிறது.

ஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை போன்று தமிழகத்திலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அவ்வகையில் தமிழகத்தில் புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 463 பேருக்கு மேற்கொள்ள சோதனையில் 33 ஆயிரத்து 59 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் அதிகபடியாக சென்னையில் ஆறாயிரத்து 16 பேரும், கோவையில் 3071, செங்கல்பட்டில் 2299, திருவள்ளூரில் 1890, ஈரோட்டில் 1568, திருப்பூரில் 1561, தூத்துக்குடியில் 132, திருச்சியில் 1271, மதுரையில் 1011 என கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் 364 பேர் பலி; 33,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிடும் தமிழக அரசு!

இதன் மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 364 பேர் பலியானதாகவும், அதில் தனியார் மருத்துவமனையில் 172 பேரும், அரசு மருத்துவமனையில் 192 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 369 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 21 ஆயிரத்து 362 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து இதுகாறும் 14 லட்சத்து 3052 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்.

இருப்பினும் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 929 ஆக உள்ளது.

banner

Related Stories

Related Stories