சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் இயங்கி வரும் கொரோனா பெருந்தொற்று கட்டளை மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, கொரோனா பெருந்தொற்று கட்டளை மையத்தை பார்வையிட்டேன் என்றும் கொரோனா பெற்றுந்தொற்று கட்டளை மையம் நல்ல திட்டம் என தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு இந்த கட்டளை மையம் பெரிய அளவில் உதவியாக உள்ளது என கூறிய அவர் சென்னை மாநகராட்சி சார்பிலும் இதுபோன்ற ஒரு கட்டளை மையம் உருவாக்கி டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அறிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரிசோதனை எடுத்தாலே கொரோனா மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக 30 ஆயிரங்கள் தயார் நிலையில் வைத்து வழங்கி வருகிறோம். மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை கட்டாயம் வீடுகளில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா பரிசோதனை எடுத்து வீடுகளில் தனிமை படுத்தும் வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமை படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்த அவர், இதன் மூலம் சென்னையில் கொரோனா பரவல் தொற்று குறையும் என நம்பிக்கை உள்ளதாக மாநகராட்சி ஆனையர் ககன் தீப் சிங் பேடி பேசினார்.