Corona Virus

கொரோனா நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்.. பொதுவான அறிவுரைகளும்.. சென்னை மாநகராட்சி வெளியீடு!

வைரஸ் தொற்றுக்கு பாதிப்பிற்குள்ளானவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான அறிவுரைகளை சென்னை பெருநரக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்.. பொதுவான அறிவுரைகளும்.. சென்னை மாநகராட்சி வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவிட் நோய் அறிகுறியுடைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

1. கோவிட் 19 பரிசோதனை முடிவு (பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ்) அல்லது பரிசோதனை செய்யாத நோயாளிகள்)

2 கோவிட் தொற்று அறிகுறிகள். உடல் சோர்வு, உடல்வலி, தொண்டை கரகரப்பு, மூச்சு திணறல், தொடர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, இருமல், சுவை இழப்பு, வாசனை இழப்பு.

3.ஆக்சிஜன் அளவு (spo2) 96 சதவீதத்திற்கும் அதிகம் உள்ள, ஒற்றை மூச்சு பிடித்தல் (single breath count >20) 20 நொடிகளுக்கு அதிகம் உள்ள மற்றும் சுவாச விகிதம் (respiratory rate) நிமிடத்திற்கு 18ற்கும் குறைவாக உள்ள நோயாளிகள்

இவ்வறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு கீழ்கண்ட மருந்துகள் வழங்கப்படுகிறது. இவற்றை கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி உட்கொள்ள வேண்டும்.

மாத்திரை ஐவர் மெக்டின் (ivermectin), (12மி.கி1 முறை 3 நாட்களுக்கு)

மாத்திரை அஜித்ரோமைசின் (azithromycin) (500மி.கி 3 நாட்களுக்கு)

மாத்திரை வைட்டமின் சி(VITAMINC)500மிகி5 நாட்களுக்கு)

மாத்திரை ஜின்க் (ZincX50 மி.கி 5நாட்களுக்கு)

மாத்திரை ரானிடிடைன்(Ranitidine)(150மி.கி5 நாட்களுக்கு)

•பாராசிட்டமால் (Paracetamol)மாத்திரை 500 மிகி ஒரு நாளைக்கு 4 முறை

• இணை நோயிற்கான மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டும் • போதிய நீர் சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்

குப்புறப்படுத்த நிலையில் நாளொன்றுக்கு 2 முதல் 4 மணிநேரம் தகுந்த இடைவெளியுடன் அதிகபட்சம் 16 மணிநேரம் வரை ஓய்வு எடுக்க வேண்டும்

கோவிட் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கான பொதுவான அறிவுரைகள்.

1. வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2.கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்

3.முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

4. கடினமான உடல் உழைப்பைத் தவிர்க்கவும்,

5. குப்புறப்படுத்த நிலையில் நாளொன்றுக்கு 2 முதல் 4 மணிநேரம் தகுந்த இடைவெளியுடன் அதிக பட்சம் 16 மணிநேரம் வரை ஓய்வு எடுக்க வேண்டும்

6. தகுந்த இடைவெளியில் மிதமான மற்றும் போதிய நீர்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

7. உடலில் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பதுடன் எல்லா நிலைகளிலும் சீரான சர்க்கரை கட்டுப்பாடு இருக்க வேண்டும். இணை நோயிற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

இவ்வறிகுறிகள் இருந்தால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் படவேண்டும்

1 தொடர்ச்சியான காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், மூச்சு திணறல் மற்றும் உடல் சோர்வு

2 ஆக்ஸிஜன் அளவு 90-94 சதவீதம் அல்லது சுவாச விகிதம் நிமிடத்திற்கு 24-30 எனில் ஆரம்ப சுகாதார மையம் பரிசோதனை மையங்களில் உள்ள மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

3. ஆக்ஸிஜன் அளவு 90 சதவீதத்திற்கு குறைவாக இருந்தாலோ மற்றும் சுவாச விகிதம் நிமிடத்திற்கு 24 - க்கு அதிகமாக இருந்தாலோ கோவிட் சிறப்பு மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளை ஆக்ஸிஜன் உதவிக்காக அணுக வேண்டும்.

4. மருத்துவ தேவைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவர்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்களின் மூலம் காணொளி வாயிலாக தொடர்பு கொள்ளவும். 044-25619263, 25619264, 25384520, 46122300

மருத்துவமனை அனுமதிக்கு அவசர மருத்துவ உதவி எண் 104ஐ அழைக்கவும்.

banner

Related Stories

Related Stories