Corona Virus

“பகைமை மறந்து இந்தியாவிற்கு உதவிய சீனா” : ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர்களை அனுப்பிய செஞ்சிலுவை சங்கம்!

கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவிற்கு சீன செஞ்சிலுவை சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

“பகைமை மறந்து இந்தியாவிற்கு உதவிய சீனா” : ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர்களை அனுப்பிய செஞ்சிலுவை சங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலைக் காரணமாக நாடுமுழுவதும் மருத்துவ வசதிகளை நோயாளிகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்காமல் மோடி அரசு திணறி வருகிறது.

குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல நோயாளிகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிற்கு உதவுவதற்கு சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவுதற்கு முன்வந்துள்ளனர்.

அந்தவகையில், கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவிற்கு சீன செஞ்சிலுவை சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுதொடர்பாக சீனாவின் சஞ்சு என்ற இடத்தில் இருந்து ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், வென்டிலேட்டர்களை அந்நாட்டு செஞ்சிலுவை சங்கத்தினர் அனுப்பி வைத்தனர்.

அதன்படி, முதற்கட்டமாக 100 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், 40 வென்டிலேட்டர்கள் மற்றும் தொற்று தடுப்பு மருந்துகள் நேற்று விமானம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவை இந்தியாவையும் வந்தடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா செஞ்சிலுவை சங்கத்திற்கு ரூ. 7 கோடியே 32 லட்சம் ரூபாய் நிதி விரைவில் ரொக்கமாக அனுப்பிவைக்கப்பட்ட உள்ளது. இந்தியா - சீனாவுக்கு இடையே இருந்த பகைமை மறந்து இந்தியாவிற்கு சீனா உதவ முன்வந்துள்ளதுற்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories