Corona Virus

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் : மே.,6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் : மே.,6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், கட்டுப்படுத்த வரும் மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு சார்பில் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மே 6ம் தேதி காலை 04.00 மணி முதல் மே 20ம் தேதி காலை 04.00 மணி வரை 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு:

அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும்.

பேருந்துகள், டாக்ஸி, ரயிலில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி.

மளிகை, காய்கறிக் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். மூன்றாயிரம் சதுர அடி கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்கான தடை தொடரும்.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். மீன் இறைச்சிக் கடைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையே இயங்கும்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம் : மே.,6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழக அரசு அறிவிப்பு!

தேநீர் கடைகள் மதியம் 12.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது; உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும்.

இறுதி ஊர்வலம், அதைச் சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்குப் பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சமுதாயம், அரசியல், கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு நாள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்க தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அழகு நிலையங்கள், ஸ்பா இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், ஸ்பா இயங்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவை அமலில் இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories