Corona Virus

“பொதுமுடக்கம் அறிவித்தால் மட்டுமே இந்தியா தப்பிக்கும்” : அமெரிக்கா தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை !

கொரோனாவில் இருந்து தப்பிக்க, முழு முடக்கத்தை இந்தியா அறிவிக்க வேண்டும் என என அமெரிக்காவின் தொற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

“பொதுமுடக்கம் அறிவித்தால் மட்டுமே இந்தியா தப்பிக்கும்” : அமெரிக்கா தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைக் கட்டுபடுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், அவை அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது.

குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாக, இந்தியாவில் நோய்தொற்றை சமாளிக்க முடியாமல் மோடி அரசு திணறி வருகின்றது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ஆக்சிஜன் பற்றக்குறைக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்தநிலை நீடித்தால் இந்தியா மிக மோசமான நிலையை சந்திக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், கொரோனாவில் இருந்து தப்பிக்க, முழு முடக்கத்தை இந்தியா அறிவிக்க வேண்டும் என அமெரிக்காவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் அந்தோணி அறிவுறுத்தியிருக்கிறார்.

“பொதுமுடக்கம் அறிவித்தால் மட்டுமே இந்தியா தப்பிக்கும்” : அமெரிக்கா தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை !

இந்தியாவிற்கு அமெரிக்காவில் இருந்து நிதி உதவி மற்றும் ஆக்சிஜனை அமெரிக்காவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனி ஃபாஸி செய்து வருகின்றார். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்தோனி ஃபாஸி, “இந்தியா இப்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. இப்படியான சூழலில், உடனடி தீர்வு என்னவென்பதையே இந்தியா பார்க்க வேண்டும்.

உடனடியாக ஆக்சிஜன் சப்ளை, மருந்துகள், தடுப்பூசிகள், பிபிஇ பாதுகாப்பு ஆடைகளை அதிகமாக சப்ளை செய்ய வேண்டும். அனைவரையும் ஒன்றிணைத்து இந்தியா இந்த நேரத்தில் கொரோனா சிக்கலைக் கையாள வேண்டும்.

மேலும் இந்தியா பொதுமுடக்கத்தில் இருக்க வேண்டும். நாடு தழுவிய முழு பொதுமுடக்கம் என்பது ஏற்கமுடியாத விஷயம்தான். ஆனால், இப்போதைய சூழல் அதுமட்டுமே மிகச்சிறந்த பலனை தரும். இதனால் கொரோனாவும் பரவுதலும் தடுக்கப்படும்; மேற்கொண்டு பொருளாதார பின்னடைவும் ஓரளவு தவிர்க்கப்படும். அதைவிட்டுவிட்டு, இந்தியாவில் கொரோனா ஒழிந்துவிட்டது என அறிவிப்பது, அவசரத்தில் செய்யும் செயல்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories