Corona Virus

திட்டமிட்டபடி தடுப்பூசி போடுவதில் சிக்கல்; 2வது தவணைக்கே முன்னுரிமை - அலட்சியம் காட்டும் மோடி அரசு!

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி  தடுப்பூசி போடுவதில் சிக்கல்; 2வது தவணைக்கே முன்னுரிமை - அலட்சியம் காட்டும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தடுப்பூசி விநியோகத்தில் தட்டுப்பாடு. மத்திய அரசு அறிவித்தபடி நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்.

டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கான வாய்ப்பில்லை என்று அறிவித்துள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசி மூலம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது டோஸ் வழங்குவதற்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

கூடுதல் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் 18 வயதுக்கு மேற்பட்டோர்கான தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என்றும் இந்த மாநிலங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை மாநிலங்களில் இதே நிலைமை நடிப்பதால் நாளை திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திட்டம் தொடங்குவதில் மேலும் சில நாட்கள் தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி  தடுப்பூசி போடுவதில் சிக்கல்; 2வது தவணைக்கே முன்னுரிமை - அலட்சியம் காட்டும் மோடி அரசு!

இதற்கிடையே, தடுப்பூசி விலை நிர்ணயம், ஆக்கிஜன், படுக்கை தட்டுப்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்துள்ள வழக்கும், தடுப்பூசிக்கான விலையை குறைக்க கோரி மும்பையைச் சேர்ந்த பொதுநல அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவும் இன்று விசாரிக்கப்படுகிறது.

முன்னதாக தேசம் ஒரு அழிவை சந்தித்து கொண்டிருக்கும் போது உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறி ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள், தடுப்பூசி வினியோகம், விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

banner

Related Stories

Related Stories