Corona Virus

₹80,000க்கு விற்கப்படும் ரெம்டெசிவர்; சென்னை KMCக்கு படையெடுக்கும் மக்கள்; கள்ளச்சந்தையை ஆதரிக்கும் அரசு?

ரெம்டெசிவர் மருந்துக்காக பிற மாவட்டங்களில் இருந்து சென்னை கே.எம்.சிக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

₹80,000க்கு விற்கப்படும் ரெம்டெசிவர்; சென்னை KMCக்கு படையெடுக்கும் மக்கள்; கள்ளச்சந்தையை ஆதரிக்கும் அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரெம்டேவிசர் மருந்து தட்டுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு குறையும் பொழுது பயன்படுத்த கூடிய ரெம்டேவிசர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் 6 டோஸ் 9400 ரூபாய் என விற்பனை செய்யப்படும் ரெம்டேவிசர் மருந்து கள்ளச்சந்தையில் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

₹80,000க்கு விற்கப்படும் ரெம்டெசிவர்; சென்னை KMCக்கு படையெடுக்கும் மக்கள்; கள்ளச்சந்தையை ஆதரிக்கும் அரசு?

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், மட்டுமே இம்மருந்து கிடைக்கும் நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கு போதிய அளவு மருந்து கிடைப்பதில்லை.

நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் மருந்து கிடைக்காமல் திரும்பி செல்வதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் உயிருக்காக போராடி வரும் நிலையில் மருந்திற்காக காத்திருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆகவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு மருந்து அதிக அளவில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories