Corona Virus

ஆக்சிஜன் கையிருப்பை தாரைவார்த்துவிட்டு உயிரிழப்பை தடுக்க முடியாமல் திணறும் மோடி அரசு! CoronaCrisis

‘வெண்ணெய்யை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை’யாகதான், மத்திய அரசின் இந்த செயல் இருப்பதாக சமூக ஆர்வலவர்களும், மருத்துவ நிபுணர்களும் சாடி வருகின்றனர்.

ஆக்சிஜன் கையிருப்பை தாரைவார்த்துவிட்டு உயிரிழப்பை தடுக்க முடியாமல் திணறும் மோடி அரசு! CoronaCrisis
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகளவில் கொரோனா வைரஸ் 2ம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. உருமாறிய புதுவகை கொரோனா அறிகுறிகளே இல்லாமல் நேரடியாக நுரையீரலைத் தாக்கி வருவதாக மருத்துவஅறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இதனால், கொரோனா முதல் அலையை காட்டிலும் 2வது அலையில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அளிப்பதற்கு ஒரு நாளைக்கு 2,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக தேவைப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் துடிதுடித்து இறந்து கொண்டிருக்கின்றனர். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

ஆக்சிஜன் இன்றி கொத்துக்கொத்தாக பலி

போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கொத்துக்கொத்தாக செத்து மடியும் அவலம் டெல்லியில் அரங்கேறி கொண்டிருக்கிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல், மக்கள் பீதி அடைந்துள்ளனர். பல தனியார் மருத்துவமனைகள், ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் கொரோனா நோயாளிகளை சேர்ப்பதையே நிறுத்திவிட்டன.

தற்போது, ஆக்சிஜன் தயாரிப்பதற்கான இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. அதேபோல், உள் நாட்டிலும் மூடப்பட்ட தொழிற்சாலைகளையும் திறக்க சொல்லி ஆக்சிஜனை தயாரிக்கும்படி கூறி வருகிறது. ‘வெண்ணெய்யை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை’யாகதான், மத்திய அரசின் இந்த செயல் இருப்பதாக சமூக ஆர்வலவர்களும், மருத்துவ நிபுணர்களும் சாடி வருகின்றனர்.

ஆக்சிஜன் கையிருப்பை தாரைவார்த்துவிட்டு உயிரிழப்பை தடுக்க முடியாமல் திணறும் மோடி அரசு! CoronaCrisis

மத்திய அரசின் செயலால் தவிப்பு!

கொரோனா தடுப்பூசிகளைப் போலவே, இந்தியாவிடம் அதிகளவில் மருத்துவ ஆக்சிஜனும் கையிருப்பு இருந்தது. வெளிநாடுகளுக்கு மத்திய அரசு இந்த தடுப்பூசியை இலவசமாக கொடுத்ததால், தற்போது இந்தியாவில் அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் தவிக்கின்றனர். ஆக்சிஜன் விவகாரத்திலும் மத்திய அரசு இதே தவறை செய்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட, இந்தாண்டு வெளிநாடுகளுக்கான ஆக்சிஜன் ஏற்றுமதியை மத்திய அரசு 2 மடங்காக அதிகரித்ததே, நாட்டில் தற்போது அதற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு முக்கிய காரணம்.

குடிமக்களை மூச்சுதிணற வைத்த பெருமை மத்திய அரசையே சேரும் என்று மக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆக்சிஜன் ஏற்றுமதி இரு மடங்கு உயர்வு!

சமீபத்தில் முடிந்த 2020-21ம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 9,294 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2018-19ல் 5,744 மெட்ரிக் டன், 2019-20ம் ஆண்டில் 4,502 மெட்ரிக் டன்னாகவும் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளை விட, 20-21ல் மருத்துவ ஆக்சிஜன் ஏற்றுமதி 2 மடங்காக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வங்க தேசத்திற்குதான் அதிகளவு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ‘கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த ஆக்சிஜன் தற்போது கையில் இருந்திருந்தால், அவற்றை அவசர காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழிற்சாலைகளும் கூடுதல் ஆக்சிஜனை தயாரிக்க அவகாசம் கிடைத்திருக்கும். இவ்வளவு நோயாளிகள் மூச்சுச்திணறி இறந்திருக்க மாட்டார்கள். தனக்கு மிஞ்சினால் மட்டுமே தானமும், தர்மமும் என்பதை மத்திய அரசு உணராததேஇ தற்கு காரணம்’ என சமூக ஆர்வலர்களும், மருத்துவ நிபுணர்களும் வேதனையுடன் சொல்கின்றனர்.

நமது தேவையை உணராத மத்திய அரசு!

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் தினமும் 7,500 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 6,600 டன் ஆக்சிஜன் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது, தேவைக்கேற்ப தயாரிப்பு இருப்பினும், ஒரே சமயத்தில் பலருக்கும் விநியோகிக்க வேண்டியிருப்பதால் பற்றாக்குறைக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டெண்டர் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவ திரவ ஆக்சிஜனை பாதுகாப்பாக ஏற்றி வருவதற்கான பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் இவை மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன.

மேலும், சாலை வழியாக இவை சென்று ஆக்சிஜனை ஏற்றி வருவதற்கு நீண்ட நாட்களாகும். அதற்குள் பல நூறு உயிர்களை இழக்க நேரிடும். எனவே, சிறப்பு ரயில்களின் மூலம் ஒரே நேரத்தில் பல டேங்கர் லாரிகளை ஏற்றிச் சென்று ஆக்சிஜன் நிரப்பி வர, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பல ஆயிரம் கோடியை வீணடிக்கும் மோடி அரசு!

மேலும், விமானப்படை விமானங்கள் மூலம் டேங்கர் லாரிகள் ஏற்றிச் செல்லப்பட்டு, விரைவாக ஆக்சிஜன் ஏற்றி வரப்படுகிறது. இதற்காக பல ஆயிரம் கோடி வீணாக செலவிடப்படுகிறது. கையிருப்பு இருந்த ஆக்சிஜனை முன் சிந்தனையுடன் அப்படியே கையிருப்பு வைத்திருந்தால், இன்றைக்கு இத்தனை இந்திய மக்களின் உயிர்களை இழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

திரவ மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்வதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்னை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜார்கண்ட் மாநிலம், போகோவில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று உத்தரப் பிரதேசத்துக்கு இயக்கப்பட்டது.

ரெயில்களில் ஆக்சிஜன்கள்!

நேற்று காலை வந்த இந்த ரயிலில் 2 திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொன்றும் 15 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டுள்ளன. இதில் ஒன்று லக்னோவிற்கும், மற்றொன்று வாரணாசியும் கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவ ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் வந்ததை அடுத்து மாநிலத்தின் தற்போதைய ஆக்சிஜன் பற்றாக்குறையில் பெருமளவு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, 4 டேங்கர் லாரிகளும் 2வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை லக்னோவில் இருந்து புறப்பட்டு போகாரோ சென்றுள்ளது.

banner

Related Stories

Related Stories