ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் மீண்டும் 21 நோயாகளிகளை இழந்துள்ளோம். விநியோகத்தை சரிசெய்யப் பிறப்பித்த உத்தரவுகளை ஏன் செயல்படுத்த வில்லை என்று மத்திய அரசிடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில அரசுகளே நேரடியாக ஆக்சிஜன் பெறுவதற்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசே தொழிற்சாலைகளிடமிருந்து பெற்று மாநில அரசுகளுக்கு தொடர்ந்து ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரடியாக ஆக்சிஜன் கேட்டு தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதியதற்கு மத்திய அரசின் சோலிசிட்டர் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசே தொழிற்சாலைகளிடமிருந்து பெற்று மாநில அரசுகளுக்கு தொடர்ந்து ஒதுக்கீடு செய்தால்தான் குழப்பம் ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவித்தார்.
20 பேரை பலி கொடுத்த டெல்லி ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மாலை 5 மணிக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் வரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து ஆக்சிஜன் திருப்பிவிடப்பட்ட போது காலதாமதாகிவிட்டது. இயல்பான விநியோக முறை முடங்கிக் கிடக்கிறது. அதனை விரைவில் சீர்செய்தால்தான் நிலமை சீராகும் என்று வாதிட்டார்.
சாந்தி முகந்த் மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 96 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிரிச்சையில் உள்ளனர். ஆக்சிஜன் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, புதிய நோயாளிகளை திருப்பி அனுப்பி வருகிறோம் என்று தெரிவித்தார்.
டெல்லி 125 மெட்ரிக் டன் கேட்டபோது, மத்திய அரசு 85 மெட்ரிக் டன் வழங்கும் படி கூறுகிறது என்று ஐனாக்ஸ் தெரிவித்தது. கிடைக்க வேண்டிய 490 மெ.டன்னில் 50% மட்டுமே கிடைப்பதாக டெல்லி அரசும் கூறியது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் விநியோகத்தில் ஏன் இந்த குளறுபடி? என்று கேள்வி எழுபினர். அதற்கு பதிலளித்த சோலிசிட்டர். தேசிய அளவில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தன்னிடம் தகவல் இல்லை. தான் நிபுணரும் கிடையாது என்று தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் மத்திய அரசு தனது முழு அதிகாரத்தையும் செயல்படுத்தி தடைகளை நீக்கி ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.