Corona Virus

கொரோனாவால் தவிக்கும் இந்தியா: உதவ முன் வந்த பாகிஸ்தானியர்கள் : உதவியை மறுக்கும் மோடி அரசு!

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்ற உதவுங்கள் எனக் கேட்டு பாகிஸ்தான் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனாவால் தவிக்கும் இந்தியா: உதவ முன் வந்த பாகிஸ்தானியர்கள் :    உதவியை மறுக்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் சந்தித்ததை விட மிகவும் கொடூரமான கோர முகத்தை இந்தியாவில் காட்டி வருகிறது.

இரண்டாவது அலையின் தீவிரத்தால் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்துக் கொண்டும், நடு ரோட்டில் இறக்கிறார்கள்.

தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கை வசதி என கேட்பது அனைத்தும் தட்டுப்பாடாகவே இருக்கிறது. இறந்த உடல்களை எரியூட்டவும் புதைக்கவும் கூட இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் தங்கள் வாழ்நாளில் நினைத்திராத இப்படியான கொடூர நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனாவால் தவிக்கும் இந்தியா: உதவ முன் வந்த பாகிஸ்தானியர்கள் :    உதவியை மறுக்கும் மோடி அரசு!

இந்த நிலையில், இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு மக்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அதன்படி ட்விட்டரில் #IndiaNeedsOxygen என்ற ஹேஷ்டேக்கை அந்நாட்டு நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் நம்மால் இயன்ற உதவியை இந்தியாவுக்கு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானின் அப்துல் சத்தார் எதி என்ற அறக்கட்டளை சார்பில் முழுமையான மருத்துவ உபகரணங்கள் கொண்ட ஊழியர்களுடன் கூடிய 50 ஆம்புலன்ஸ்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அந்த அறக்கட்டளை கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த ஒப்புதலும் அளிக்கப்படாமல் உள்ளது.

நாட்டு மக்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் வேளையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மத்திய மோடி அரசு கையாண்டு வருவது ஏற்புடையதல்ல என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories