சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக ஆடவர் விடுதியில் கொரோனா சிகிச்சை முகாமை திறந்து வைத்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 900 படுக்கை வசதிகளுடன் உள்ள இந்த முகாமில் முதற்கட்டமாக 250 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “கொரோனா 2ஆம் அலைக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், முதலில் வீட்டிற்கு பரிசோதனை செய்ய வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் கூற வேண்டும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா இறப்பை கட்டுப்படுத்த முடியும். பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வேண்டுகோள், காய்ச்சல் சளி இருந்தாலே வீடு வீடாக சோதனைக்கு வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் தயக்கம் காட்டாமல் கூற வேண்டும். இறப்பை தவிர்க்க பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முன்கூட்டியே மக்கள் மருத்துவமனையை நாட வேண்டும்
மக்களுக்கு காய்ச்சல் கொரோனா தொடர்பாக சந்தேகம் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைத்து மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அணுகலாம். மண்டலத்திற்கு 2 என்ற வீதத்தில் 30 இடங்களில் நிரந்தரமாக புதிதாக கொரோனா பரிசோதனை செய்யும் இடங்கள் துவங்கியுள்ளோம்.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கபட்டவர்கள் வீடுகளில் தனிமை படுத்திகொள்ள அறிவுரை வழங்கினால் அவர்களில் ஒருவராக இருந்தாலும் குடும்பத்தினர் மற்ற யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. மருத்துவமனை அல்லாத 14 கொரோனா சிகிச்சை மையங்களில் 12,600 படுக்கைகள் தயராக உள்ளது. தற்போது 1,710 படுக்கைகள் நிரம்பியுள்ளது. மக்களுக்கு அதிகமாகும் போது கூடுதலாக 10,000 படுக்கைகள் தயாரிக்க உள்ளோம்.
தனியார் மருத்துவமனகள் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பது பொது சுகாதாரத்துறை கீழே வரும். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இல்லை. பொது சுகாதாரத்துறை தான் கட்டணத்தை நிர்ணயிக்கும். சென்னையை பொறுத்தவரை இன்று 28,005 நபர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில், 125,33 பேர் வீட்டில் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக செல்கிறது. 100 சதவீதம் பாதுகாப்பானது மக்கள் பயன்படுத்த வேண்டும். சென்னைக்கு மட்டும் 2 லட்சம் டோஸ் மத்திய சுகாதாரத்துறை கொடுத்துள்ளது.
45 வயது பூர்த்தியடைந்தோர் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும், மே மாதம் முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட வருவார்கள். தடுப்பூசி திருவிழாவை ஒப்பிடும்போது தடுப்பூசி போடும் பணியில் சற்று வேகம் குறைந்துள்ளது. கபசுர குடிநீர் சென்னை முழுவதும் மக்களுக்கு வழங்க முடியாது. கொரோனா கட்டுப்பாடு பகுதியில் மட்டுமே வழங்க முடியும்.
நேற்று இரவு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வந்திருக்கிறது. இன்னும் 3 அல்லது 4 நாட்களில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள் வர இருக்கிறது. தொடர்ந்து பயன்பாட்டில் தடுப்பூசி இருந்து வருவதால் அதன் தேவை அதிகரித்து வருகிறது.” எனக் கூறியுள்ளார்.