Corona Virus

முழு ஊரடங்கு அச்சம்; விழிப்புணர்வு ஏற்படுத்தாத அரசு - சொந்த ஊருக்கு படையெடுக்கும் பின்னலாடை தொழிலாளர்கள்!

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் ஊரடங்கு அச்சத்தால் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

முழு ஊரடங்கு அச்சம்; விழிப்புணர்வு ஏற்படுத்தாத அரசு - சொந்த ஊருக்கு படையெடுக்கும் பின்னலாடை தொழிலாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரத்தால் இந்தியாவில் தினந்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கிறார்கள். அதில் முன்கள பணியாளர்களும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, வார இறுதி நேர ஊரடங்கு என பல வகைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அன்றாடம் உழைத்தால் வாழ்வாதாரம் பிழைக்கும் வகையில் இருக்கும் தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு விதித்த ஊரடங்கில் இருந்தே மீண்டிருக்காத நிலையில் அரசின் முழுமையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் சாமானிய மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோக ஒருவேலை உணவுக்காக நாள் தோறும் உழைக்கும் ஏழை மக்களிடம் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற கெடுபிடிகளும் தொடர்ந்து வருகிறது.

முழு ஊரடங்கு அச்சம்; விழிப்புணர்வு ஏற்படுத்தாத அரசு - சொந்த ஊருக்கு படையெடுக்கும் பின்னலாடை தொழிலாளர்கள்!

இப்படியாக நிலைமை இருக்க, தமிழகத்தின் டாலர் சிட்டி என அழைக்கக் கூடிய திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் முழு முடக்கம் அறிவித்திடுவார்களோ என்ற அச்சத்தில் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். இதனால் பின்னலாடை தொழிலில் சிறு, குறு முதல் பெரு நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை போல உற்பத்திகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அரசு தரப்பில் இருந்து முறையான அறிவிப்புகளை வெளியிட்டு வெளி மாநிலத் தொழிலாளர்களின் அச்சத்தை போக்கு வகையில் தகுந்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories