Corona Virus

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்; திணறும் அ.தி.மு.க அரசு!

திருநெல்வேலி, கரூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்;   திணறும் அ.தி.மு.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியா முழுவதையும் பீடித்திருக்கிறது. இதன் காரணமாக தினந்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அறிவித்துவிட்டால் பொருளாதார நிலை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஆகவே வாழ்வாதாரத்தை காத்துக்கொள்வதற்காக மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி திருநெல்வேலி, கரூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி எப்பொழுது மருத்துவமனைக்கு அரசால் அனுப்பி வைக்கப்படும் என்று தெரியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி போட சென்ற மக்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை என்று சொல்லி அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது கடந்த சில தினங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே கோவாக்சின் தடுப்பூசி தீர்ந்துவிட்டது. நேற்று மாலை வரையில் கோவிஷீல்டு தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போட்டு வந்த நிலையில் அந்த தடுப்பூசியும் தீர்ந்துவிட்டது.

இன்று காலையிலிருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியவில்லை. அதே போல இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட வந்தவர்களை செவ்வாய்க்கிழமை திரும்ப வரச் சொல்லி அனுப்பி உள்ளோம் என்றனர்.

இதனிடையே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனோ கொரோன மருந்து மட்டுமல்லாமல் குறைந்தது 3 மாததிற்கான 120 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் மக்கள் மருந்து குறித்து கவலைப்படமால், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கூறியிருந்தார்.

ஆனால், கள நிலவரமோ கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு என்ற செய்தியை தெரிவிக்கின்றன. சுகாதார செயலாளர் பேசி ஒரு நாள் கூட நிறைவு பெறாத நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவது அரசின் நடவடிக்கை மீதான மக்களின் அதிருப்தியை மேன்மேலும் அதிகபடுத்தவேச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories