Corona Virus

உ.பி.,யில் ‘கோமா’ நிலைக்கு சென்ற சுகாதாரத்துறை : யோகி ஆதித்யநாத் மீது அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

உத்தர பிரேதசத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பை அம்மாநில அமைச்சரே கேள்வி எழுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

உ.பி.,யில் ‘கோமா’ நிலைக்கு சென்ற சுகாதாரத்துறை : யோகி ஆதித்யநாத் மீது அமைச்சர்  பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளதாக மத்தியில் அரசு கூறி வருகிறது.

ஆனால் மகாராஷ்டிடா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றக்குறை ஏற்படுத்துள்ளதாக அம்மாநில அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாது பா.ஜ.க அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் அம்மாநில அரசு தோல்வி அடைந்துள்ளதாக பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகளே புலம்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, உத்தர பிரேதம், மத்திய பிரேதம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கொரோனா தடுப்பு கட்டமைப்பு படும் மோசமாக இருந்து வருவதாக கூறிவருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரேதசத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பை அம்மாநில அமைச்சரே கேள்வி எழுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

உ.பி.,யில் ‘கோமா’ நிலைக்கு சென்ற சுகாதாரத்துறை : யோகி ஆதித்யநாத் மீது அமைச்சர்  பரபரப்பு குற்றச்சாட்டு!

இதுதொடர்பாக உத்தர பிரதேச மாநிலத்தின் சட்ட அமைச்சர் பிரிஜேஷ் பதக், அம்மாநில சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மாநிலத்தில் சுகாதாரத்துறை பெரும்பாலும் சீர்குலைந்துள்ளது. சட்டத்துறை அலுவலகத்தில் இருந்து ஃபோன் மூலம் தொடர்புக்கொண்டால் கூட, முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாரும் எடுப்பதில்லை.

கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு 4 முதல் 7 நாட்கள் வரை ஆகிறது. குறுகிய தொலைவில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு 6 மணி நேரமாகிறது. குறிப்பாக பத்மஶ்ரீ விருது பெற்ற எழுத்தாளர் யோகேஸ் பிரவீன் உடல்நிலை மோசமடைந்த போது, தலைமை மருத்துவ அதிகாரியை போனில் அழைத்து ஆம்புலன்ஸ், சிகிச்சை தொடர்பாக உத்தரவிட்டிருந்தேன்.

ஆனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சென்று சிகிச்சை அளிக்காததான் விளைவாக அவர் இன்று உயிரிழந்துள்ளார். நாள் ஒன்று கொரோனா உபகரணம் 17 ஆயிரம் தேவை என்றால், கையில் இருப்பது வெறும் 10 ஆயிரம் தான். இதனை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்.” என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்ய நாத் அரசுக்கு எதிராக அம்மாநில அமைச்சர் ஒருவரே பகிங்கர குற்றச்சாட்டு கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories