கொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், இரண்டவது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துநிபணர்களால் அரிதியிட்டு கணிக்க முடியவில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி அரசு தலைமை வழக்கறிஞரிடம், இரண்டாவது அலை தொடர்பாக நீதிமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதாரத் துறையின் அறிவுரை ஏதும் உள்ளதா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், கொரோனா வைரசின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், இரண்டவது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்து நிபணர்களால் அரிதியிட்டு கணிக்க முடியவில்லை என்று தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணனை இன்று பிற்பகலில் சந்திக்குமாறு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.