Corona Virus

பிரேசிலை பின்னுக்குத் தள்ளிய இந்தியா; 2 மடங்கு அதிகரித்த கொரோனா -அரசுகளின் மெத்தனமே காரணமென குற்றச்சாட்டு

இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக உச்சபட்ச ஒரு நாள் பாதிப்பே 97,894 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலை பின்னுக்குத் தள்ளிய இந்தியா; 2 மடங்கு அதிகரித்த கொரோனா -அரசுகளின் மெத்தனமே காரணமென குற்றச்சாட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரொனா பரவலின் இரண்டாவது அலையின் தீவிரம் உச்சத்தை அடைந்திருப்பதற்கு சான்றாக அமைந்திருக்கிறது கடந்த 24 மணிநேரத்தில் பதிவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைகள்.

உலகில் கொரோனா தோன்றியதில் முதல் முறையாக இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை கடந்திருப்பது நாட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தினசரி கொரொனா பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரொனா உச்சத்தைத் தொட்டது. அப்போது அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு என்பது செப்டம்பர் 16 ஆம் தேதி 97,894 ஆக பதிவாகியிருந்து. இந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் வாரம் தினசரி பாதிப்பு பத்தாயிரத்துக்குக் கீழ் குறைந்தது.

பின்னர், அது படிப்படியாக உயரத்தொடங்கியது. இன்றோ ஒரு நாள் பாதிப்பு இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. பொதுமக்களிடம் கொரோனா குறித்த அச்சம் குறைந்ததால் முக கவசம் அணிவதை தவிர்த்தனர்.

மத்திய மாநில அரசுகளும் இரண்டாம் அலை குறித்த போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவே இந்த அளவுக்கு தொற்று அதிகரிக்கக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories