Corona Virus

முதல் முறையாக 8000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 25 பேர் பலி - இன்றைய CoronaUpdates

முதல்முறையாக தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 8000-ஐ நெருங்கியுள்ளது.

முதல் முறையாக 8000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 25 பேர் பலி - இன்றைய CoronaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக 97 ஆயிரத்து 668 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 2564 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது.

மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.54 லட்சத்து 948 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 772, கோவையில் 540, திருவள்ளூரில் 383, தூத்துக்குடியில் 244, திருப்பூரில் 225, வேலூரில் 216, மதுரையில் 199, நெல்லையில் 193, கடலூர், சேலத்தில் தலா 175, தஞ்சையில் 158, நாகையில் 157, கிருஷ்ணகிரியில் 156, ஈரோட்டில் 153, காஞ்சியில் 124, வேலூரில் 113, திண்டுக்கல்லில் 112 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியிருக்கிறது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 25 பேர் பலியானதை அடுத்து 12 ஆயிரத்து 970 ஆக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் புதிதாக 3,464 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து 8.87 லட்சத்து 663 பேர் இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டிருக்கிறார்கள். இருப்பினும் 54 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories