Corona Virus

“அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியமானது - மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” : தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்!

அடுத்த 2 வாரங்கள் மிகவும் முக்கிய சவாலான நாட்கள். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

“அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியமானது - மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” : தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்!
aara
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனா 2வது அகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இத்தகைய சூழலில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் தடுப்பூசி முகாம் நடைபெறும் சின்ன போரூரில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரானா இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நமக்கு இது படிப்படியாக ஏறும் சூழ்நிலையில் உள்ளது.

போர்க்கால அடிப்படையில் நாம் தயாராகி கொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் போதிய படுக்கை வசதிகள் நம்மிடம் இருகிறது. தமிழகம் முழுவதும் 79,000 படுக்கை வசதிகள் உள்ளன. தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும். 1.45 லட்சம் ரெம்டெசிவர் கையிருப்பில் உள்ளது. மாஸ்க் அணியாத 2.39 லட்சம் பேரிடம் 5.7 கோடி அபராதம் வசூலித்துள்ளோம்.

“அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியமானது - மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” : தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்!
Kalaignar TV

கொரோனா தடுப்பூசி 40.99 லட்சம் பயன்படுத்தி உள்ளோம். வரும் இரண்டு வாரம் மிக மிக முக்கியம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள் தேவையற்ற பயணம், பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவர்கள் அதை தானாக கடைபிடிக்கலாம் என வலியுறுதினார்.

தடுப்பூசி பொறுத்தவரை நோய் எதிர்ப்பை வலு படுத்தும். அடுத்த2 வாரங்களுக்கு கட்டாயம் அனைவரும் முக கவசங்கள் போட்டாலே கொரானா குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் 79 ஆயிரம் படுக்கை வசதிகள் கோவிட் கேர் செண்டரில் உள்ளது அடுத்த வாரத்திற்குள் 15 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்படும் என தெரிவித்தார்.

ரஷ்ய தடுப்பூசியை ( ஸ்புட்னிக் வி ) மத்திய அரசு கொள்முதல் செய்யப்பட்ட பின் தமிழகத்திற்கு தருவார்கள் எனவும் அது 91.6 % பாதுகாப்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories