Corona Virus

உலகிலேயே அதிக உச்சம்: புதிதாக 1.68 லட்சம் பேருக்கு கொரோனா: மக்களை காக்க என்னதான் செய்ய இருக்கீங்க?

புதிதாக 11,80,136 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1.68 லட்சத்துக்கும் மேலானோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக உச்சம்: புதிதாக 1.68 லட்சம் பேருக்கு கொரோனா: மக்களை காக்க என்னதான் செய்ய இருக்கீங்க?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவை மீண்டும் உலுக்கி வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி மொத்தமாக இதுகாறும் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 717 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும், ஒரே நாளில் 904 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த கொரோனா பலி ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 179 ஆகியிருக்கிறது. ஆனால் புதிதாக 75 ஆயிரத்து 86 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.21 கோடியே 56 ஆயிரத்து 529 ஆக உள்ளது.

இருப்பினும் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் தற்போது 12 லட்சத்து 1009 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் 10 கோடியே 45 லட்சத்து 28 ஆயிரத்து 565 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்றும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 29 லட்சத்து 33 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories