இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி தினந்தோறும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு ஊரங்கில் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகிறது என்று அது ஏப்ரல் 30 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் முழு ஊரடங்கு விதிப்பதற்கான வித்தாகவே பார்க்கப்படுகிறது எனவும் கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால் அரசு தரப்பில் முழு ஊரடங்கு என தகவல் பரவுவது வதந்தியே என தெரிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் விவரம் பின்வருமாறு:
தமிழகத்தில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபார அங்காடிகள் மட்டும் செயல்பட தடை.
காய்கறி, பல சரக்கு கடைகள் உட்பட ஷாப்பிங் மால்கள், பெரிய ஷோரூம்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை இயங்கலாம்.
உணவகங்கள், டீக்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. இரவு 11 மணி வரை அமர்ந்து உணவருந்தலாம்.
உணவு பார்சல்கள் இரவு 11 மணி வரை அனுமதிக்கப்படும்.
கேளிக்கை விடுதிகளுக்கு 50% மட்டுமே அனுமதி.
பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், மியூசியம் போன்றவைக்கும் 50% மட்டுமே அனுமதி.
திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கும் மட்டுமே அனுமதி.
விளையாட்டு அரங்குகள், மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.
அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு எந்த தளர்வுகளும் இல்லை.
மாவட்டங்களில் மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை.
பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம். நின்றுக்கொண்டு பயணிக்க அனுமதியில்லை.
உள் அரங்குகளில் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்களில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம்.
சின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடையில்லை. ஆனால் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்ய வெண்டும்.
வாடகை மற்றும் டாக்ஸியில் ஓட்டுநரை தவிர 3 பேர் மட்டுமே பயணிக்கலாம். ஆட்டோக்களில் இருவருக்கு மட்டுமே அனுமதி.
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்.