Corona Virus

மாஸ்க் இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்குள் அனுமதி இல்லை; 6ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு?: ராதாகிருஷ்ணன் பேட்டி!

“மாஸ்க் இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்குள் அனுமதி இல்லை. 6ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு என்ற வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்” என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாஸ்க் இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்குள் அனுமதி இல்லை; 6ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு?: ராதாகிருஷ்ணன் பேட்டி!
aara
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சுகாதாரப் பணியாளர்கள் முழுவீச்சில் செயல்பட்டாலும், தடுப்பூசி செலுத்தி கொள்ள குறைவான அளவிலேயே மக்கள் வருகின்றனர். கேட்டால் தேர்தலை காரணமாக கூறுகின்றனர்.

எனவே 7ம் தேதிக்கு பின் வாய்ப்புள்ள பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதுவரை 32 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. தேர்தல் நல்ல முறையில் நடத்த, சுகாதார துறைக்கு தேர்தல் ஆணையம், மாநகராட்சி ஆகியவை கேட்டு கொண்டுள்ளது.

அதன்படி தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அனைத்து பூத் களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் மாஸ்க் அணிந்து தான் வாக்களிக்க செல்ல வேண்டும்.

மாஸ்க் இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்குள் அனுமதி இல்லை; 6ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு?: ராதாகிருஷ்ணன் பேட்டி!

மாஸ்க் இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்குள் அனுமதிம்மப்பட மாட்டாது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரிசோதனை, சிகிச்சை, தனிமை படுத்துதல் போன்றவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தேர்தல் முடிந்த பின், 7ம் தேதி முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் சரிபார்ப்பது மீண்டும் தொடங்கப்படும். தேர்தல் காரணமாக வீட்டுக்கு சென்று காய்ச்சல் பரிசோதிக்க செல்ல முடியாமல் இருந்தது.

எனவே 7ம் தேதி முதல் முழுவீச்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். 925 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தன்னார்வலர்கள் பணி அமர்த்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். 6ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு என்ற செய்தியை நம்பவேண்டாம்.

ஆனால், நோய் பரவல் அதிகரித்து வருவதை மக்கள் புரிந்துகொண்டு, தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும். பள்ளிகளை நாம் மூடி உள்ளோம், ஆனால் பயிற்சி வகுப்புகளை, நடத்தி வருகின்றனர். இது யாரை ஏமாற்றுகின்றனர் என்று தெரியவில்லை. நேற்றோடு பிரச்சாரம் முடிந்துவிட்டது. எனவே கொரோனா பரவாது என்று அஜாக்கிரத்தையாக இருக்க கூடாது.

மாஸ்க் இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்குள் அனுமதி இல்லை; 6ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு?: ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மற்ற மாவட்டங்களில் குறைவாக உள்ளது என்றார். இந்தியாவில் 5.29 என்ற அளவில் சோதனை செய்தவர்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்ட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனை மற்றும் கண்காணிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களை எப்படி வாக்கு சாவடி மையங்களுக்கு அழைத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். மாலை 6-7 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வரலாம் அவர்களுக்கு பிபி கிட் வசதி ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கிறோம் என்றார்.

banner

Related Stories

Related Stories