புதிதாக 85 ஆயிரத்து 494 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழகத்தில் ஒரே நாளில் மூவாயிரத்து 290 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,188 பேருக்கும், செங்கல்பட்டில் 280, கோவையில் 277, திருவள்ளூரில் 183, திருச்சியில் 122, தஞ்சையில் 120, காஞ்சியில் 119, மதுரையில் 105 என கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் பதிவாகியிருக்கிறது.
ஆகவே தமிழகம் முழுதும் இதுவரையில் பதிவான கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.92 லட்சத்து 780 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அரசு மருத்துவமனையில் 4, தனியாரில் 8 என 12 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 750 ஆக அதிகரித்திருக்கிறது.
அதேவேளையில் புதிதாக 1,715 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தாலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 606 ஆக உயர்ந்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் பரப்புரையில் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் மக்களை காக்கும் கடமையில் இருந்து ஆளும் அ..திமு.க அரசு தவறியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.