Corona Virus

தேர்தல் பிசியில் மக்களை தவிக்கவிட்ட எடப்பாடி அரசு: மூவாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு! CoronaUpdates

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 19 பேர் உயிரிழந்தது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தேர்தல் பிசியில் மக்களை தவிக்கவிட்ட எடப்பாடி அரசு: மூவாயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு! CoronaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிதாக 85 ஆயிரத்து 331 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் 2817 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் நால்வர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

சென்னையில் 1083 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கோவையில் 280, செங்கல்பட்டில் 258, திருவள்ளூர் 158, காஞ்சியில் 115, தஞ்சையில் 113 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.89 லட்சத்து 490 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் உயிரிழந்ததால் இதுவரையில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 1634 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் இதுகாறும் 8.59 லட்சத்து 709 பேர் குணமாகியிருக்கிறார்கள்.

இருப்பினும், தற்போது 17 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழலின் தினந்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால் மீண்டும் ஒரு முழு ஊரடங்கை சந்திக்கும் நிலை வருமோ என மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் எந்த கால தாமதமும் செய்யாமல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போர்க்கால நடவடிக்கையை அரசு முடுக்கிவிட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories