Corona Virus

கொரோனாவை வைத்து காசு பார்த்த எடப்பாடி அரசால் மீண்டும் மிரட்டும் தொற்று... புதிதாக 2,279 பேர் பாதிப்பு!

தொடர்ச்சியாக இரண்டாயிரத்துக்கும் மேல் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பதிவாவதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கொரோனாவை வைத்து காசு பார்த்த எடப்பாடி அரசால் மீண்டும் மிரட்டும் தொற்று... புதிதாக 2,279 பேர் பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலை வைத்து எந்த வகையில் கமிஷன் பார்க்கலாம் என அ.தி.மு.க அரசு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தில் மீண்டும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மலை போன்று அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் 2000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,279 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 8 பேர் ஆவர். மேலும் சென்னையில் மட்டுமே 815 பேருக்கும், கோவையில் 211, செங்கல்பட்டில் 202, தஞ்சாவூரில் 130, திருவள்ளூரில் 129, காஞ்சிபுரத்தில் 80, திருவாரூர், திருச்சியில் தலா 58, கடலூரில் 57, நாகையில் 56, திருப்பூரில் 52 என மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

கொரோனாவை வைத்து காசு பார்த்த எடப்பாடி அரசால் மீண்டும் மிரட்டும் தொற்று... புதிதாக 2,279 பேர் பாதிப்பு!

ஆகவே ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 81 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா 7 என 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து இதுவரையில் 12 ஆயிரத்து 684 ஆக உயர்ந்திருக்கிறது மாநிலத்தின் கொரோனா பலி எண்ணிக்கை.

இதனையடுத்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,352 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து தற்போது 13 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories