Corona Virus

மீண்டும் உக்கிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 46,951 பேருக்கு வைரஸ் தொற்று - வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!

இந்தியாவில் சில ஆயிரம் கணக்கில் பதிவாகி வந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் பல்லாயிரம் கணக்கில் உருவெடுத்துள்ளது.

மீண்டும் உக்கிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 46,951 பேருக்கு வைரஸ் தொற்று -  வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 2020 மார்ச் முதல் நீடித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வரை தணித்து காணப்பட்டது. தற்போது கடந்த 1 மாதங்களாக தொற்று பரவல் அதிகரித்து வருவதை மக்களை மீண்டும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் 10 முதல் 15 ஆயிரம் வரையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 30, 35, 40, 45 ஆயிரம் என கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

அவ்வகையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 951 என பதிவாகியிருக்கிறது. அதில் மகாராஷ்டிராவில் மட்டும் 30 ஆயிரத்து 535 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரையில் பாதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 16 லட்சத்து 46 ஆயிரத்து 81 என அதிகரித்துள்ளது.

அதேபோல, நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 212 பேர் பலியானதை அடுத்து 1.59 லட்சத்து 967 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் புதிதாக 21 ஆயிரத்து 180 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.11 கோடியே 51 ஆயிரத்து 468 ஆக உள்ளது.

இருப்பினும் 3.34 லட்சத்து 646 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 4 கோடியே 50 லட்சத்து 65 ஆயிரத்து 998 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories