Corona Virus

மீண்டும் உச்சம்தொடும் வைரஸ் பரவல் : மாநில அரசை கவிழ்த்து கொரொனா பரவலை தடுக்க மறந்த மோடி அரசு ! #COVID

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் உச்சம்தொடும் வைரஸ் பரவல் : மாநில அரசை கவிழ்த்து கொரொனா பரவலை தடுக்க மறந்த  மோடி அரசு ! #COVID
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலால் இந்தியாவில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அண்மைக்காலமாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக மீண்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் மீண்டும் அறிவிக்கப்படாத ஊரடங்கை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்திவிடுமோ என்கிற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் நாட்டு மக்கள். இதற்கிடையே இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவலுக்கு மத்திய மாநில அரசுகளின் மெத்தனமே காரணம் என சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த பிப்ரவரி இறுதி வாரம் முதலே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. அவ்வகையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 903 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. ஆகவே, 2.34 லட்சத்து 406 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் உச்சம்தொடும் வைரஸ் பரவல் : மாநில அரசை கவிழ்த்து கொரொனா பரவலை தடுக்க மறந்த  மோடி அரசு ! #COVID

இதனையடுத்து, மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.14 கோடியே 38 ஆயிரத்து 734 ஆக அதிகரித்திருக்கிறது. இதுபோக, நேற்று (மார்ச் 16) ஒரே நாளில் 188 பேர் பலியானது மக்களை மேலும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

சரியாக ஊரடங்கு அறிவித்து ஒரு ஆண்டு ஆகியிருக்கும் நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மோடி அரசின் நடவடிக்கைகள் தோல்வியையே தழுவியிருக்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

மேலும், மாநில அரசுகளை கவிழ்ப்பதில் ஆர்வம் செலுத்தி கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை காப்பதில் இருந்து மத்திய பாஜக அரசு தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அரசின் இந்த மெத்தனத்திற்கு எதிர்வரும் ஐந்து மாநில தேர்தலில் வெளிப்படும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories