Corona Virus

தஞ்சையில் 56 மாணவிகளுக்கு கொரோனா; 2 வாரங்களுக்கு பள்ளி மூடல் - தடுப்பு நடவடிக்கையை கைவிட்ட எடப்பாடி அரசு

பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தஞ்சையில் உள்ள பள்ளிக்கு இருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில்  56 மாணவிகளுக்கு கொரோனா; 2 வாரங்களுக்கு பள்ளி மூடல் - தடுப்பு நடவடிக்கையை கைவிட்ட எடப்பாடி அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டதால் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி கடந்த 11-ம் தேதி பள்ளியில் பயிலும் 460 மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில்  56 மாணவிகளுக்கு கொரோனா; 2 வாரங்களுக்கு பள்ளி மூடல் - தடுப்பு நடவடிக்கையை கைவிட்ட எடப்பாடி அரசு

மேலும், 12-ம் தேதி மாணவிகள் 619 பேருக்கும், ஆசிரியைகள் 35 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் 56 பேருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு இருவார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் 9 ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1100 மாணவிகள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories