Corona Virus

மீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு!

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடுமுழுவதும் கொரோனா பரவலை கட்டப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தீவிர ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தீவிரமடைந்துள்ள ஐந்து மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு தாராளமாக போக்குவரத்து நடக்கிறது. விமானங்கள், ரயில்கள், பஸ்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்குகின்றன. இது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,50,577 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 52,585 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,70,60,551 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,35,169 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 49 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 41 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 36 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 483 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,34,043 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 4,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,488 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories