Corona Virus

பீதியடைய வைக்கும் புதிய கொரோனா: அதிரவைக்கும் கூடுதல் அறிகுறிகள்.. இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரிட்டனில் உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸால் மேலும் 7 அறிகுறிகள் தென்படுகிறது என இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பீதியடைய வைக்கும் புதிய  கொரோனா: அதிரவைக்கும் கூடுதல் அறிகுறிகள்..  இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் எனும் ஆட்கொல்லி தொற்று நோய் தற்போது ஒரு ஆண்டை கடந்தும் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

பல கட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு உலக மக்கள் அனைவரும் வாழ்வாதாரம் இல்லாமல் முடங்கிக் கிடந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக சில நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

அதேச் சமயத்தில் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளும் தொடர்ந்து சோதனைக்குள்ளாக்கப்பட்டதோடு செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரிட்டனில் கொரோனா வைரஸின் மரபணு உருமாற்றம் அடைந்து அது தீவிர வைரஸாக பரவும் தன்மையை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பீதியடைய வைக்கும் புதிய  கொரோனா: அதிரவைக்கும் கூடுதல் அறிகுறிகள்..  இங்கிலாந்து சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இதனால் அந்நாட்டில் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா உட்பட பல்வேறு பிரிட்டனுடனான விமான சேவைக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் அறிகுறிகள் குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அதில், ஏற்கெனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் ஏற்படும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கு. ஆனால், புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் பசியின்மை, தலைவலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி, தோல் அரிப்பு போன்ற 7 புதிய அறிகுறிகள் கூடுதலாக தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories