Corona Virus

சென்னையின் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்: ஐ.ஐ.டியில் இதுவரையில் 183 பேருக்கு வைரஸ் பாதிப்பு..!

சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையின் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்: ஐ.ஐ.டியில் இதுவரையில் 183 பேருக்கு வைரஸ் பாதிப்பு..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.

சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வரும் நிலையில் சோதனை நடத்தப்பட உள்ளது. சென்னை ஐ ஐ டி வளாகத்தில் இந்த மாதம் 1ஆம் தேதி முதல் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதி மெஸ் மூலமாக பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி வளாகத்தில் நான்கு மாணவர்களுக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் மெஸ் பணியாளர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையின் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்: ஐ.ஐ.டியில் இதுவரையில் 183 பேருக்கு வைரஸ் பாதிப்பு..!

தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்கவே மெஸ் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காண்டேக்ட் ட்ரேசிங் செய்ததில் 11ஆம் தேதி 11 பேருக்கும், 12ம் தேதி 12 பேருக்கும், 13ஆம் தேதி 32 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஐஐடி வளாகத்தில் ஆய்வகங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்திக் கொண்டு விடுதி அறைகளில் இருந்தோ அல்லது வீடுகளில் இருந்தோ பணி செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 பேரும் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. மொத்தம் 774 மாணவர்களில் 408 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டியில் மேலும் 79 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த 15 நாட்களில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையின் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்: ஐ.ஐ.டியில் இதுவரையில் 183 பேருக்கு வைரஸ் பாதிப்பு..!

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பாக சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இங்கு நான்கு மாணவர் விடுதிகள் இருக்கிறது. மூன்று கட்டங்களாக பிரித்து சுமார் 700 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று மேற்கொண்ட பரிசோதனைகளில் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . இன்று பரிசோதனை மேற்கொண்ட மாணவர்களின் முடிவுகள் நாளை வெளிவரும்.

banner

Related Stories

Related Stories